நீர் தந்த இந்த வாழ்விற்காய் - neer thantha intha vaazhvirkaai

நீர் தந்த இந்த வாழ்விற்காய்

உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்

ஏன் இந்த அன்பு என்மீது

உம்மை நன்றியுடன் துதிப்பேன்

இயேசையா இயேசையா இயேசையா

எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்

எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்

நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை

உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை

சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்

கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்

ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்

ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே

வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே

வானிலும் பூவிலும் ஆசையும் நீரே

சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்

அழைத்தவர் நீரோ மாறிடவில்லை

இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர்

கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர்

ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும்

நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்

பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா

பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா

புழுதியிலிருந்து தூக்கின அன்பே

புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்

மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்

இயேசுவே நீரே எனது தாகம்

நீர் தந்த இந்த வாழ்விற்காய் - neer thantha intha vaazhvirkaai

neer thantha intha vaazhvirkaai

ummai ennaalum sthoththarippen

aen intha anpu enmeethu

ummai nantiyudan thuthippaen

eththanai kirupaikal en meethu vaiththeer

evvalavaay ennil porumai konnteer

nantikal sollida vaarththaikal illai

unthanin anpirku alavae illai

siram thaalththi panninthida oti vanthaen

karam enthan siram vaiththu aaseervathiyum

jeevanaith thantheer ennai meettukkonnteer

jeevikkum naatkal umakkaakaththaanae

vaalvilum neerae thaalvilum neerae

vaanilum poovilum aasaiyum neerae

soolnilai ellaam maarinapothum

alaiththavar neero maaridavillai

irulilae unthanin velichcham thantheer

karuvilae kanndavar arukilae ninteer

aayiram nantikal naan sollittalum

neer seytha nanmaikal palakotiyaakum

pathil enna seyvaen en Yesu naathaa

paathamae veelnthaen en anpu thaevaa

puluthiyilirunthu thookkina anpae

pukalnthiduvaen naan vaalnthidum varaiyil

makimaiyin thaesam enthanin aekkam

Yesuvae neerae enathu thaakam